follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல்

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த தாக்குதலில் 6 ஐநா ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு – இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 41,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 95,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.

இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

சூழல் இப்படி இருக்கையில் காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது போர் தொடங்கியதிலிருந்து 90% காசா மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன.

மறுபுறம் இஸ்ரேல் தாக்குதலில் ஐநா ஊழியர்களே படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா ஏஜென்சி (Unrwa) மத்திய காசாவில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த பாடசாலை மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக...

பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – இருவர் மீண்டும் விளக்கமறியலில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர்...