சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் 71 பிரதிநிதிகள் இதுவரை நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.
அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், இரண்டு 22 பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ANFREL அமைப்பின் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை 06 எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 34 ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களும், ANFREL இலிருந்து 3 பேரும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு வருகை தர உள்ளனர்.
இந்த தேர்தல் கண்காணிப்பு பணியில் அண்டை நாடுகளின் 7 பிரதிநிதிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22 தேர்தல் மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாட்டுக்கு வந்துள்ள கண்காணிப்புக் குழுக்கள் முன் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.