follow the truth

follow the truth

October, 7, 2024
Homeவிளையாட்டுமதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

Published on

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பெத்தும் நிஷங்க 27 ரன்களிலும், திமுத் கருணாரத்ன 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரோக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ICC சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை வீரர்கள்

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்ய, கமிந்து மெண்டிஸ் மற்றும்...

சனத் ஜயசூரியவின் நியமனம் உறுதியானது

இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

இந்திய – பங்களாதேஷ் முதலாவது டி20 போட்டி இன்று

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக...