follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

Published on

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

காலி சமனல விளையாட்டரங்கில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:

”நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா என மக்களிடம் கேட்கிறேன். மாற்றம் தேவை என்கிறார்கள். பங்களாதேஷத்தில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா துரத்தப்பட்டார். நாட்டை முன்னேற்றிய தலைவி போராளிகளால் விரட்டப்பட்டார். இன்று பங்களாதேஷில் 19 மணி நேர மின்வெட்டு அமுலில் உள்ளது. இந்த நாட்டிற்கும் அப்படியொரு மாற்றம் தேவையா என்று கேட்கிறேன். எனவே இந்த தேர்தலில் சரியான முடிவை எடுங்கள். இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, உலகின் ஏனைய நாடுகள் இருந்த இடத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது சேவை நாட்டுக்கு தேவை. ஜனாதிபதியினால் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக...

பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – இருவர் மீண்டும் விளக்கமறியலில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர்...