follow the truth

follow the truth

October, 7, 2024
Homeஉலகம்அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

Published on

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டன. இதனால் தொழிலாளர்கள் நீண்ட நேரம் பணி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த சராசரி வேலை வார நாட்களை கொண்டு 5 நாடுகள் குறித்து பார்ப்போம்…

வனுவாட்டு: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 24.7 மணிநேரம்

கிரிபட்டி : ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 27.3 மணிநேரம்

மொசாம்பிக்: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.6 மணிநேரம்

ருவாண்டா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 28.8 மணிநேரம்

ஆஸ்திரியா: ஒருவர் வாரத்திற்கு சராசரியாக 29.5 மணிநேரம்

மிக நீண்ட வேலை வாரங்களைக் கொண்ட 5 நாடுகள்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 52.6 மணிநேரம்

காம்பியா: ஒரு வேலை செய்யும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.8 மணிநேரம்

பூட்டான்: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 50.7 மணிநேரம்

லெசோதோ: ஒரு வேலையில் இருப்பவருக்கு வாரத்திற்கு சராசரியாக 49.8 மணிநேரம்

காங்கோ: பணிபுரியும் நபருக்கு வாரத்திற்கு சராசரியாக 48.6 மணிநேரம்

இந்த மணிநேரங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில், வேலை செய்பவர்களில் 46% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள். இது ‘அதிகப்படியான வேலை வரம்பு’ என்று கருதப்படுகிறது. ஆஸ்திரியாவில் பணிபுரிபவர்களில் 8% பேர் மட்டுமே அதிக வேலை வரம்புக்கு மேல் வேலை செய்கிறார்கள்.

சராசரி அமெரிக்கத் தொழிலாளி வாரந்தோறும் 36.4 மணிநேரத்துடன் நடுநிலையில் உள்ளார். இந்த எண்ணிக்கை தென் கொரியா (37.9 மணி நேரம்), சீனா (46.1), ரஷியா (37.8) மற்றும் இந்தியா (47.7) ஆகியவற்றை விட குறைவாக உள்ளது,

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. மாலை வரைக்கும் விமான சேவைகள் இரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று மாலை வரைக்கும் விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்வதாக ஈரான்...

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில்...

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள்...