தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவதில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையமும் தொடர்புடைய அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்று நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.