தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது.
அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் மற்றும் அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.