ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று (22) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஏ.ஜே.எம் முஸம்மில் பதவி விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அநுர விதானகமகே நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவும், தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.