முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்கான பலத்தையும் தைரியத்தையும் தாம் விரும்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.