follow the truth

follow the truth

August, 26, 2025
Homeஉலகம்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் - பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

Published on

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இன்று இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில காலமாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான மோதலும் தீவிரமடைந்துள்ளது. முதலில் சிறு துப்பாக்கிச் சூடு, சிறிய ஏவுகணை தாக்குதல் எனத் தொடங்கிய இது இப்போது தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் தான் ஹிஸ்புல்லாவை குறித்து மீது பேஜர் மற்றும் வாக்கி டாக்கி வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தனது தாதாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் கொடூர தாக்குதலில் பல குழந்தைகள், பெண்களும் கூட உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ள நிலையில், லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக தங்கள் வீடுகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படும் கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...