follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1போதியளவு எரிபொருள் உள்ளது

போதியளவு எரிபொருள் உள்ளது

Published on

இலங்கையில் 123,888 மெட்ரிக் தொன் டீசலும் 13,627 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் இருப்பதாக முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை இடும் போதே முன்னாள் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இலங்கையில் தொண்ணூறாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோல் மற்றும் பதினெட்டாயிரத்து எழுநூற்று இருபத்தி ஒன்பது மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோல் உள்ளதாக இது தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முப்பதாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஐந்து மெற்றிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தனது உத்தியோகபூர்வ காரையும் அமைச்சு அலுவலகத்தையும் கையளித்து புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...