தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதம், கொழும்பில் உள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.
இங்கு உரையாற்றிய தாயக மக்கள் கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, இன்று தாயக மக்கள் கட்சியின் முக்கியமான சந்தியாக மாறியுள்ளது.
“சகோதரர் திலும் அமுனுகம இன்று எம்முடன் எமது கட்சியின் தேசிய அமைப்பாளராக இணைந்து கொள்கிறார்.”