follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஜப்பான் தயார்

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியான ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (H. E. MIZUKOSHI Hideaki) தெரிவித்திருந்தார்.

இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜப்பானிய தூதுவர் இதனைத் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் தற்போது நடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய தூதுவர் இங்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவ திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம், டெரஸ்ட்ரியல் டெலிவிஷன் ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், தேசிய பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பு மேம்பாட்டு திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், களு கங்கை நீர் வழங்கல் திட்டம் மற்றும் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள ஹபரணை – வேயங்கொட மின் விநியோக பாதைத் திட்டம் மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்படவுள்ளதோடு, நிறைவடைந்துள்ள களனி கங்கை புதிய பாலம் நிர்மாணத் திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் இதில் அடங்கும் என ஜப்பானிய தூதுவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக...

வேட்பாளர்கள் சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக்...

பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...