follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுகமிந்து மெண்டிஸ் அபார சதம்

கமிந்து மெண்டிஸ் அபார சதம்

Published on

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தனது 5 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையிலேயே மேற்படி ஐந்தாவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

​நேற்றைய தினம் அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து 50இற்கும் மேல் ஓட்டங்கள் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று படைத்த சாதனையையே அவர் முறியடித்தார்.

முன்னதாக சுனில் கவாஸ்கர், பசில் புட்சர், சயீட் அஹமட் மற்றும் பேர்ட் சட்கிளிப் ஆகியோர் தனது முதல் ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் அரைச் சதம் பெற்றிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...