follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பொதுத் தேர்தலில் இருந்து பின்வாங்கிய விக்கி

பொதுத் தேர்தலில் இருந்து பின்வாங்கிய விக்கி

Published on

இளையோருக்கு இடமளித்து இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றினை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் தமது அரசியல் சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்குப் பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் எனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித்...