முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பொது பாதுகாப்பு அமைச்சில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் பாதுகாப்பை நீக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் தமக்கு தேவையான பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறித்து தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஏனைய கடமைகளில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களை சேவையின் தேவையின் அடிப்படையில் பொலிஸாருக்கு நியமிக்க பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.