follow the truth

follow the truth

July, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அவர் இலங்கை வரவிருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை வருகின்ற முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பார்க்கப்படுகிறார்.

அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அவரது விஜயம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகியிருக்கவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பிள்ளையானுக்கு தகவல் தெரிந்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும்...

க்ரீன் சிக்னல் – அமெரிக்க வரி விவகாரம் இரகசிய நிலையில்!

உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னிட்டு, அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் தற்போது பல நாடுகளுடனும் விவாதிக்கப்படுகின்றன. இதனைக்...