follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP1வரலாற்றில் முதல் முறையாக சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

வரலாற்றில் முதல் முறையாக சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

Published on

வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் கிழக்கு மாகாண சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மேலும் மாணவர்களுக்கு ஊக்கமளித்த பெற்றோர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள்;

“.. தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு வருவது என்பது நடைமுறை சாத்தியம்.
ஆனால் 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை என்பது வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாண சபையின் புதிய சிறந்த கல்வி கொள்கையுமே காரணம் என அறியமுடிகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் கல்வி அமைச்சர் இல்லாத சூழ்நிலையில் கல்வி அமைச்சராகவும் அவர் செயற்பட்டார். பல வருடங்களாக இருந்த கிழக்கு மாகாண கல்வி கொள்கைகளில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய கொள்கைக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டங்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள், நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் சரியானவை என்பது இந்த வருட பெறுபேறுகளில் தெரியும் என தெரிவித்ததோடு,அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கல்விக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேற முக்கிய காரணியாக திகழ்ந்தது..” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானை டெய்லி சிலோன் தொடர்பு கொண்ட போது;

“..கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே பொருளாதாரம் வளரும் எனவும், கல்வி கொள்கையில் பல மாற்றத்தை கொண்டு வந்தேன். பல விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

விமர்சனங்களுக்கு அஞ்சினால் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை நான் நன்றாக அறிந்தவன். என்னதான் நான் கொள்கைகளை நிலைநாட்டி, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் அதற்கான முழு பாராட்டுகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர், பெற்றோர்கள் என அனைவரையும் சேரும்”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பாதை தற்காலிகமாக பூட்டு

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக...

வேட்பாளர்கள் சொத்து விபரங்களை கையளிக்க வேண்டும்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக்...

பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...