நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் மி.மீ.50 மழையும் பெய்யக்கூடும்.
தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.