follow the truth

follow the truth

October, 5, 2024
Homeவிளையாட்டுதலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.

X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், நேற்றிரவு தான் ODI தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கூறினார்.

முன்னதாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மோசமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அவருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி அணியின் தலைவராக இருந்தார். ஆனால் மார்ச் 2024 இல் பாபர் மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் நாக் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணித் தலைவராக அவர் இரண்டாவது முறை தோல்வியடைந்தார்.

அங்கு, மிகவும் குறைந்த தரவரிசையில் இருந்த அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

பின்னர், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்தது.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடும் அழுத்தத்தில் உள்ளது, அதற்கு முக்கிய காரணம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுதான் என்றும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் – ரமீஸ் ராஜா

இந்திய கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது. கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல்...

முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால்...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம்...