follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

தஹம் மற்றும் ராஜிகா தாயக மக்கள் கட்சியில் இணைவு

Published on

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும் கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...