follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுவெங்காய விலையில் மீண்டும் சிக்கல்

வெங்காய விலையில் மீண்டும் சிக்கல்

Published on

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த சந்தை விலை சுமார் 156, 160, 170 ரூபாவாக உள்ளமை வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு வெங்காயமானது குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் இல்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனைக் கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வெளிநாட்டில் இருந்து பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வதால், உள்ளுர் பெரிய வெங்காயத்திற்கு விலை இல்லை எனவும், இதனால், தொழிலில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள், பெரிய வெங்காயத்திற்கு கிலோவுக்கு 275 முதல் 300 ரூபாய் வரை வழங்க அரசு பொறுப்புள்ள தரப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...