நடிகை தமிதா அபேரத்னவை இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பரிந்துரைப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே உறுதியளித்த தொலைபேசி உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிதா அபேரத்ன – ஹலோ ஹேஷா…
ஹேஷா விதானகே – உங்கள் பெயர் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. லிஸ்ட் பண்ணி அனுப்பியுள்ளேன். இப்ப நான் போட்ட லிஸ்ட்டை உங்களுக்கு அனுப்புகிறேன்.
தமிதா அபேரத்ன – இரத்தினபுரி ஆசனத்தில் தானே கேட்கிறேன்.
ஹேஷா விதானகே – உங்கள் பெயர் இருக்கும் இடத்தில் நான் ஒரு கோடு வரைந்தேன். நீங்கள் அதை தலைவருடன் பேசிக் கொள்ளுங்கள்.
தமிதா அபேரத்ன – அப்படியானால் அதைத் தீர்மானிப்பது நீங்கள் இல்லையா தம்பி?
ஹேஷா விதானகே – இல்லை… .தலைவர் இறுதி முடிவை எடுக்கிறார். சீட் கொடுப்பதா என்றும் தலைவர் முடிவு செய்கிறார்.