follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்பிரித்தானியாவில் ஒமிக்ரான் - எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

பிரித்தானியாவில் ஒமிக்ரான் – எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

Published on

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு ‘அதிக விகிதத்தில் பரவுகிறது’ என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.

நேர்காணில் ஒன்றில் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை கண்டிராத அளவில் பரவுகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்டுகளுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

பிரித்தானியா மற்றொரு அலையை எதிர்கொள்கிறது, மீண்டும் தடுப்பூசி மற்றும் வைரஸுக்கு இடையிலான பந்தயத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் முடிந்த வரை விரைவாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போதுமானதாக இல்லை, ஆனால் 3 டோஸ் தடுப்பூசி அறிகுறி தொற்றுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பு அளிக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு பூஸ்டர் தடுப்பூசி திட்டங்களை விரிவுப்படுத்த இருக்கிறோம்.

நாட்டில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மற்றும் வாரத்திற்கு 7 நாட்களும் சுமார் 12 மணிநேரம் திறந்திருக்கும்.

சில மையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும். ஆனால், கிறிஸ்மஸ் அன்று தடுப்பூசி மையங்களை திறக்க வாய்ப்பில்லை.

தற்போது, பிரித்தானியாவில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட தீவிரம் குறைந்ததா என தற்போது வரை உறுதியாக தெரியவில்லை.ஆனால், அது அதிக விகிதத்தில் பரவுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சஜித் ஜாவித் எச்சரித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...