follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP1நீங்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துபவரா.?

நீங்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துபவரா.?

Published on

இணையவழி ஊடாக விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இணையத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

மேலும், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

அதற்கமைய, “சமூக வலைத்தளங்களுக்கு சென்றால் பெண்ணொருவர் வந்து இந்த க்ரீம்களை பயன்படுத்தினால் வெண்மையாகலாம் என்று சொல்கிறார். அதை நாங்கள் விளம்பரமாகவே பார்க்கிறோம்.

அந்த விளம்பரத்தைப் பார்த்தால், அந்த விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி இலக்கம் இல்லை, முகவரி இல்லை. அதிலும் குறிப்பாக சருமத்திற்காக விற்பனை செய்யப்படும் இந்த வகையான பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பொருளை எந்த நபர் நமக்கு விற்றார் என்று கண்டுபிடிக்க முடியாது.

எனவே, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விடயங்களை முற்பதிவு செய்வதிலும் பெறுவதிலும் நமது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுமார் 13 மில்லியன் ரூபா கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்...

சுமார் 15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை

கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...