follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉள்நாடுஉபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

Published on

ஆட்ட நிர்ணய வழக்கில் ஆஜராகாத இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு எதிர்காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்படும் போது மாத்தளை மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக உபுல் தரங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கிய உறுதிமொழியை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தம்மைக் கைது செய்து ஆஜர்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரி தரங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை மாத்தளை உயர்நீதிமன்றம் அழைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகமது லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...