follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுSLSI தரத்திற்கு அமையவே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் - லிட்ரோ எரிவாயு நிறுவனம்

SLSI தரத்திற்கு அமையவே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் – லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Published on

SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு நேற்று ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விசாரணையின் போது,எரிவாயு சிலிண்டரின் கலவை, அந்த கலவை சிலிண்டரில் தென்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போது சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளிடம் வினவியிருந்தனர்.

இதன்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, இந்த விடயம் தொடர்பாக தனது கட்சிக்காரரிடம் கேட்டறிந்து சமர்ப்பணங்களை முன்வைக்க இன்று வரை கால அவகாசம் பெற்றுத்தருமாறு நீதிமன்றில் கோரியிருந்தார். அதன்படி, இன்று தனது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்த போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...