follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுT-10 போட்டிகளை ஆட்ட நிர்ணயம் செய்ய முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியருக்கு பிணை

T-10 போட்டிகளை ஆட்ட நிர்ணயம் செய்ய முன்வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியருக்கு பிணை

Published on

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு பணத்திற்காக போட்டியை காட்டிக் கொடுக்க அழைப்பு விடுத்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (20) அழைக்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்குப் பதிலளித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க, சந்தேகநபரை இலங்கையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

இதன்படி, குறித்த சந்தேகநபரை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சந்தேகநபர் ஒவ்வொரு புதன்கிழமையும் விளையாட்டு ஊழல் விசாரணைப் பொலிஸ் பிரிவில் ஆஜராக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனவரி 27ம் திகதி மீண்டும் முறைப்பாட்டை அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...