follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2வட கொரியர்கள் ஹாட் டாக் சாப்பிட தடை

வட கொரியர்கள் ஹாட் டாக் சாப்பிட தடை

Published on

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருக்கமான உணவாக கருதப்படும் Hot dog இனை வட கொரியர்கள் உணவாக உட்கொள்ள கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

இந்த உணவை வீடுகளிலோ தெருக்களிலோ பரிமாறுவது அல்லது விற்பது தேசத்துரோகச் செயல் என்று அவர் ஆணையிட்டுள்ளார்.

குற்றவாளிகள் கம்யூனிஸ்ட் அரசின் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளனர், அங்கு நிலைமைகள் மிகவும் பயங்கரமாக உள்ளன, அவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பு என வடகொரிய தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2017 இல் மேற்கு சார்பு தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வட கொரியர்களிடையே வெகு விரைவில் பிரபலமடைந்தது. Budae Jjigae – ஒரு வகை ஹாட் டாக் மற்றும் ஹாட் நூடுல் சூப் என்று நகரம் முழுவதும் பேசப்பட்டது.

இப்போது சந்தையில் Budae Jjigae உணவு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும் என காவல்துறை மற்றும் சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வடகொரியா மீது கிம் பல விசித்திரமான சட்டங்களை விதித்து வருகிறார். சமீபத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடியதற்காக மரண தண்டனை அச்சுறுத்தல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...