follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published on

முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூன் 03 ஆம் திகதி மேலதிக சாட்சிய விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

அவர் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.எஸ்.சபுவித முன்னிலையில் அழைக்கப்பட்டது.

வழக்குத் தொடரை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் சாட்சியங்களை விசாரணை செய்வதற்கு மற்றுமொரு திகதியை வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரி நீதிமன்றில் கோரினார்.

இதன்படி, மேலதிக சாட்சிய விசாரணையை ஜூன் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு எச்சரித்தார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...