follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2பாகிஸ்தானை இந்தியா அவமானப்படுத்துகிறதா?

பாகிஸ்தானை இந்தியா அவமானப்படுத்துகிறதா?

Published on

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ மீண்டும் ஒரு இடியை இறக்கி இருப்பது கிரிக்கெட் உலகில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வரும் 19ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கு நாங்கள் வரமாட்டோம் என இந்தியா கூறியதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இனி இந்தியாவுக்கு வந்து நாங்களும் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்து இருக்கிறது.

இந்த சூழலில் ஹைபிரிட் மாடல் படி இந்த போட்டி நடைபெற்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் (Host) இந்த தொடரை நடத்துகிறது. அதன்படி ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் எந்த நாடு போட்டிகளை நடத்துகிறதோ, அவர்களுடைய பெயர் ஐசிசி லோகோ உடன் இணைந்து ஜெர்சியில் அச்சிடப்பட்டிருக்கும்.

அந்த வகையில் கடந்த 2023 50 ஓவர் உலகக் கிண்ண தொடரின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவின் பெயரை தங்களது ஜெர்சியில் அச்சிட்டிருந்தது. இந்த சூழலில் தான் பாகிஸ்தான் பெயரை தங்களுடைய ஜெர்சியில் நாங்கள் பொறிக்க மாட்டோம் என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இதுதான் தற்போதையை பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறது.

பாகிஸ்தானின் பெயரை தங்களது ஜெர்சியில் பயன்படுத்த இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் என்ற பெயர் இல்லாமல் ஜெர்சி தயார் செய்ய பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், கிரிக்கெட்டில் அரசியலை பிசிசிஐ நுழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது கிரிக்கெட்டு விளையாட்டுக்கும் நல்லது அல்ல. பாகிஸ்தானுக்கு முதலில் வர இந்தியா மறுத்து விட்டது. அதன் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க விழாவில் தங்களுடைய கேப்டனை அனுப்பவும் இந்தியா மறுத்து இருக்கிறது.

தற்போது எங்கள் நாட்டின் பெயரை அவர்களுடைய ஜெர்சியில் அச்சிட முடியாது என இந்தியா கூறியிருக்கிறது. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறி இருக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...