follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை - அதானி குழுமம் 

மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம் 

Published on

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு;

திட்டம் இரத்து செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை அதானி மறுக்கிறது

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. இத் திட்டம் இரத்து செய்யப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம். மே 2024இல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய ஜனவரி 2, 2025 அன்று இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவு, குறிப்பாக ஒரு புதிய அரசாங்கத்துடன், அவற்றின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகளுடன் விதிமுறைகள் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும். இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதானி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

— பேச்சாளர், அதானி குழுமம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...