follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

Published on

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது “தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்” என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.

டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...