follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மீண்டும் பந்து வீச மேத்யூ குஹ்னெமனுக்கு ICC அனுமதி

மீண்டும் பந்து வீச மேத்யூ குஹ்னெமனுக்கு ICC அனுமதி

Published on

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற பந்துவீச்சு சோதனையில் அவரது பந்துவீச்சு சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சோதனையில் அவரது முழங்கை 15 டிகிரி வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு பாணியில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு மேத்யூ குஹ்னெமன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...