follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1உலகப் புகழ்பெற்ற பாடகர் Aloe Blacc இலங்கைக்கு

உலகப் புகழ்பெற்ற பாடகர் Aloe Blacc இலங்கைக்கு

Published on

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் எலோ பிளாக் ( Aloe Blacc) இலங்கைக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள அவர், அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் பிரதான பங்கை வகிக்கிறார்.

ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சிரேஸ்ட ஆலோசகர், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில், இலங்கையில் சுகாதாரத் துறையில் முதலீட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக எலோ பிளாக் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...