தெவிநுவர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி அதிகாலை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரை வேன் ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் கந்தர பொலிஸ் மற்றும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.