இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் எதிர்வரும் 15-ம் திகதி வரை மூடப்படும் என்று இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.