follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

இந்த மனு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...