follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

Published on

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கமல் அமரசிங்க தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் தலைவராக ரோஸ்டன் சேஸ்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 வயதான சேஸ்,...