இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கடந்த 8ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் குறித்த தொடர் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்திருந்தது.
அதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று (17) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.