இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இன்று (19) காலை அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிலம் தொடர்பான திட்டங்களை அங்கீகரிக்கும் போது அரசாங்கத்திற்கு 300,000 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜெயதிலக்க மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.