follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP2நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

Published on

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார். இது குறித்து டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வந்தன. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார்.

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து மேக்ஸ்வெல் ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 50 ஓவர் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...