follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்கும் ஏர் இந்தியா

சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்கும் ஏர் இந்தியா

Published on

அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

ஒரு அறிக்கையில், அகன்ற உடல் விமானங்களுக்கான சர்வதேச சேவைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச விமானங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமான நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைக்கப்பட்ட விமான அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளதுடன் பயணிகளுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தவும் ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி, இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது, பயணிகள் உட்பட 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார்...

வெடித்துச் சிதறிய எலான் மஸ்கின் SpaceX ராக்கெட்

அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு...

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...