எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வகையான வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனப்பட்டி (seat belt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.