காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை ஹமாஸ் ஏற்காத பட்சத்தில், நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பாதிப்புகள் தீவிரமாக இருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா அனைத்து தொடர்புடைய தரப்புகளுடனும் இணைந்து செயல்படும் என்றும், இறுதி யுத்த நிறைவு திட்டத்தை கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முன்வைக்க உள்ளன என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.