புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்படும் என துணை அமைச்சர் எரங்க வீரரத்ன கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துக்கொள்ள இந்திய அரசு இலங்கைக்கு ரூ. 10.4 பில்லியன் மானியம் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் துணை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.