இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியம் (IMF) கடந்த ஜூலை 1ஆம் திகதி நிறைவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, இலங்கைக்கான ஐ.எம்.எப். தூதுக்குழு பிரதானியாக செயல்படும் எவன் பெபஜோஜியோ வெளியிட்டார்.
இதன்படி, SDR 254 மில்லியன் (சுமார் அமெரிக்க டொலர் 350 மில்லியன்) இலங்கைக்கு வழங்கப்படும். இதன் மூலம், இந்த நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தமாக US$ 1.74 பில்லியன் இலங்கைக்கு கிடைத்துள்ளது.