பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு, சர்வஜன அதிகாரத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
பாரபட்சமற்ற ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் வரை, அவர் கட்சியின் உறுப்பினராக செயல்பட முடியாது எனவும், விசாரணையின் முடிவுக்கு ஏற்ப இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.