follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1அஸ்வெசும இரண்டாம் கட்டம் - தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

Published on

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களில், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.wbb.gov.lk) பார்வையிடலாம்.

தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தில் வழங்கப்பட்ட விவரங்களில் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக நினைக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்களில் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட தொடக்க விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், வீட்டு விவரங்கள் சேகரிக்க அரசாங்கக் கள அதிகாரி வீட்டுக்கு செல்லவில்லையெனில், அத்தகைய விண்ணப்பதாரர்களும் மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீடு செய்வதற்கு முன், அனைத்து மேல்முறையீட்டாளர்களும் IWMS தரவுத்தளத்தில் தங்கள் குடும்ப விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

மேல்முறையீட்டாளர்கள் / ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

மேல்முறையீடு செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையங்களின் (Vidatha Resource Centres) உதவியையும் பெற முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...