follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

Published on

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

பொலிஸாரின் தகவலின்படி, மூவரும் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் அவர்களை தாக்கினர்.

இந்தச் சம்பவத்தில், அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணியும், அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய, கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...